#BIG BREAKING: இனி சிம் கார்டை அகற்றினால் வாட்ஸ் அப், டெலிகிராம் வேலை செய்யாது..!!

 
Q

இந்தியாவில் ஜனவரி 1, 2027 முதல் சிம் பைண்டிங் (SIM binding) கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் காரணமாக, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற குறுஞ்செய்தி செயலிகள் ஸ்மார்ட்போனில் சிம் கார்டு இல்லாமல் செயல்படாது.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் செல்போன்களில் இருந்து சிம் கார்டை அகற்றினால் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், வெறும் வைஃபை (Wi-Fi) வசதியை மட்டும் பயன்படுத்தி இச்செயலிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்மூலம் இணையக் குற்றங்கள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிம் அகற்றப்பட்டாலோ, மாற்றப்பட்டாலோ அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டாலோ, சரியான சிம் மீண்டும் செருகப்படும் வரை செயலியின் செயல்பாடு நிற்கும்.

இந்திய எண்களைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய சைபர் மோசடிகள், ஃபிஷிங் மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகளைக் கட்டுப்படுத்தவும், தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு இணங்க, ஐபோனில் இயற்பியல் சிம் கார்டு இல்லாமல் இயங்குவதைக் கண்டறிய ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் (iOS) மென்பொருளைப் புதுப்பித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு சிக்னல் (Signal) நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு இல்லாமல் வைஃபை (Wi-Fi) மூலம் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் பயன்படுத்துபவர்களை இந்த மாற்றம் பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துபவர்களும் அல்லது அடிக்கடி சிம் கார்டுகளை மாற்றுபவர்களும் இதனால் பாதிக்கப்படலாம். வெளிநாடுகளில் இருந்து செயலிகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்க இந்த விதி உருவாக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்னாப்சாட், அரட்டை, ஷேர்சாட், ஜியோசாட் மற்றும் சிக்னல் உள்ளிட்ட முக்கிய செயலிகளுக்கு தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு (TCS) விதிகளின் கீழ் தொலைத்தொடர்புத் துறை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. செயலியின் சேவையானது சாதனத்தில் உள்ள சிம் கார்டுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருப்பதை சேவை வழங்குநர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், செயலிகளின் வலைப் பதிப்புகள் (Web services) குறிப்பிட்ட கால இடைவெளியில் (ஆறு மணி நேரத்திற்கு மேல் அல்லாமல்) லாக் அவுட் செய்யப்படும்.