#BIG BREAKING : தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு..!

 
1

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி வாகை சூடின.

அதிக தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு, அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து கடிதம் கொடுத்தார். ஆனால், பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால் தான், ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து காலம் தாழ்த்தி வருகிறது.

இந்த சூழலில், 118 உறுப்பினர்கள் பலத்தை நிரூபிக்க, திமுக கூட்டணி கட்சிகளை தவெக நாடியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக-வுக்கு ஆதரவு அளித்தது. அந்த கட்சிக்கு 5 உறுப்பினர்கள் உள்ளனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் வெளியே இருந்து தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளன. 

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைத் தொடர்ந்து தவெகவிற்கு ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தனது முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது  

இந்நிலையில் தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு தெரிவித்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்ததை தொடர்ந்து. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளிப்பதாக அறிவிப்பு..விசிக ஆதரவு கடிதத்தை பெற்றுக்கொண்டார் ஆதவ் அர்ஜுனா