#BIG BREAKING : நாளை மறுநாள் 10th ரிசல்ட் ...ஜூன் 1 பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..!
தமிழகத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வு சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முன்கூட்டியே நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது. தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து, மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஏப்ரல் 6ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று ஏப்ரல் இறுதியில் முடிந்தது. இதனால், தேர்வு முடிவுகளுக்காக மாணவர்களுக்கு காத்திருக்கின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்நிலையில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும், ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் ஒன்றாம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 04 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

