#BIG BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்...சவரனுக்கு ரூ.1,840 உயர்வு!
May 6, 2026, 09:54 IST1778041463538
ஆபரண தங்கத்தின் விலையானது கணிக்க முடியாத வகையில் தினந்தோறும் மாறி வருகிறது. இதற்கு உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
உலக அளவிலான பொருளாதாரத்தை பொறுத்தவரை பெரும்பாலும் டாலரில் தான் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. எனவே டாலர் மதிப்பு அதிகமாக இருக்கும்போது முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளின் மீது தங்கள் கவனத்தை செலுத்துவர். அதுவே, டாலர் மதிப்பு குறையும்போது, பாதுகாப்பான முதலீடான தங்கத்தை தேர்ந்தெடுப்பர். அப்போது உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு கூடும்.
தற்போது, டாலர் மதிப்பு நல்ல நிலையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் டாலரின் மீது வர்த்தகம் செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை குறைந்து வருகிறது.
தங்கம் சவரனுக்கு ரூ.1,840 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது

