#BIG BREAKING : நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு வந்தவர் மாரடைப்பால் காலமானார் - சுகாசினி..!
இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், எஸ்.வி.சேகர், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பல இயக்குனர்களை உருவாக்கியவர். இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
இந்திய திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படத்தை இயக்கி, அவரே இசையமைத்து, கதாநாயகனாகவும் நடித்துப் படங்களை வென்று காட்டிய மிகச் சில ஆளுமைகளில் இவரும் ஒருவர்.
பாக்யராஜ் எழுதிய பல கதைகள் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டன. குறிப்பாக, அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான 'ஆக்ரி ராஸ்தா' என்பது பாக்யராஜின் 'அந்த 7 நாட்கள்' படத்தின் கதையாகும். 'பாக்யா' என்ற புகழ் பெற்ற தமிழ் வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றி, பல நாவல்களையும் எழுதியுள்ளார்.
இந்திய அளவில் திரைக்கதைக்கு பெயர் பெற்ற பாக்யராஜ், நடிகராக பல படங்களில் நடித்து பாராட்டை பெற்றுள்ளார். அண்மையில் ஜூன் 10-ஆம் தேதி குருநாதர் பாரதிராஜா காலமான சோகம் மறைவதற்குள், அடுத்த 17 நாட்களில் சீடர் பாக்யராஜும் மறைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் வழக்கம் போல நடைபயிற்சி மேற்கொண்ட நிலையில் பாக்கியராஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்
வழக்கம்போல் இன்று காலை நடைபயிற்சியை முடித்துவிட்டு பாக்யராஜ் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது திடீரென லேசான நெஞ்சு வலிப்பதாகக் கூறி சோபாவில் அமர்ந்தவர், அடுத்த சில நிமிடங்களில் அப்படியே மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவரை உடனடியாகச் சென்னையில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் காலமடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
குஷ்பு மகள் திருமணத்தில் நெகிழ்ச்சி – சுஹாசினி உருக்கம்:
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் இயக்குநர் பாக்யராஜ் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டார். அதுவே அவர் கலந்துகொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
அவரது மறைவு குறித்து நடிகை சுஹாசினி மணிரத்னம் மிகுந்த வேதனையுடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குஷ்பு மகள் திருமணத்தில் அவர் ரொம்பச் சந்தோஷமாக எங்களுடன் கலந்துகொண்டார். இன்று காலை கூட நடைபயிற்சி முடித்துவிட்டு வந்து, கொஞ்சம் நெஞ்சு வலிப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாக்யராஜின் மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
குஷ்பு மகள் திருமணத்தில் மிக சந்தோஷமாக கலந்து கொண்டார்; இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு வீடு திரும்பியபோது கொஞ்சம் நெஞ்சு வலி என சொல்லியிருக்கிறார்; மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது
— PttvOnlinenews (@PttvNewsX) June 27, 2026
நடிகை சுஹாசினி#Bhagyaraj | #Director | #Suhasini |… pic.twitter.com/sJPDeP5xX2

