#BIG BREAKING : அரசியலில் திடீர் திருப்பம்: மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ தவெக-வில் இணைகிறார்..!

 
1

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவல் விவகாரத்தில், தற்போது அடுத்த அதிரடியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த 2011, 2021 ஆகிய தேர்தல்களைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்று 'அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளை' என மக்களால் வர்ணிக்கப்படும் அவர், தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மூன்று அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளைத் துறந்து பனையூர் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்த நிலையில், தற்போது தென் மாவட்டத்தின் முக்கியப் புள்ளியான இசக்கி சுப்பையாவும் கோட்டையை நோக்கி காய் நகர்த்தி வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு சென்னை சென்றுள்ள இசக்கி சுப்பையா இன்று த.வெ.க-வில் இணைய உள்ளார் என்கிறார்கள்.

கொரோனா காலத்தில், அம்பாசமுத்திரம் தொகுதி மக்களுக்கு இசக்கி சுப்பையா செய்த உதவிகள் ஏராளம். ஏராளமான கிராமங்களுக்கு உணவு வழங்கினார். அரிசி பைகள் விநியோகம், காய்கறிகள் கொடுப்பது, இளைஞர்களுக்கு விளையாடுவதற்காக கிரிக்கெட் உபகரணங்கள் கொடுப்பது என நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க இரண்டாக உடைந்து, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும் டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்ட போது இசக்கி சுப்பையா டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். ஆனால் அங்கு நீண்ட காலம் நீடிக்காமல் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்ட அ.தி.மு.க-வில் இணைந்தார்.