#BIG BREAKING: ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

 
Q

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் .

 

2 மாதங்களுக்கு ஒருதடவை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, இந்த வட்டி விகிதத்தை மாற்றி அமைப் பது பற்றி ஆலோசனை நடத்துகிறது.

 

மூன்று நாள் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறித்து இன்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25%மாக தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேற்கு ஆசிய போரால் வங்கிக்கடன் வட்டிவிகிதத்தில் மாற்றம் ஏற்படுமா? என அச்சத்தில் இருந்த மக்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.