#BIG BREAKING : பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் ..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 45,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி.
கர்நாடக மாநிலம் மைசூரில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என அவரது உறவினர் அறிவித்துள்ளார்.
ஜானகியம்மா என திரையுலகில் மரியாதையாக அழைக்கப்பட்ட இவரை, 'தென்னந்தியாவின் இசையரசி' என்ற பெயரும் இவருக்கு உண்டு. எம்எஸ் விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி தொடங்கி அனிருத் வரை பல தலைமுறைகளைச் சேர்ந்த இசையமைப்பாளர்களுடன் இவர் பணியாற்றி இருக்கிறார்.
தென்னிந்தியாவின் இசையரசியான இவர், சிறந்த பின்னணி பாடகியாக 4 தேசிய விருதுகள், 33 வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். தாமதமாக வழங்கப்பட்டதாக கூறி தனக்கு வந்த 'பத்ம பூஷன்' விருதை ஏற்க மறுத்தார். தென்னிந்திய கலைஞர்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்தார்.
#LIVE : S Janaki Passed Away | பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் | #SJanaki | #Singer | #Janaki | #PolimerNews
— Polimer News (@polimernews) July 11, 2026
Link : https://t.co/iMGOCzh6ey pic.twitter.com/6RDo3OVvdt
null

