#BIG BREAKING : 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்..!

 
1

 

 

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் 2027 மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிட இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது 

இன்று தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டவுடன், பாடவாரியான தேர்வு தேதிகள் மற்றும் செய்முறைத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அரசுத் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

 

10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17 தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெறும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

12ஆம் வகுப்புக்கு மார்ச் 3 தொடங்கி மார்ச் 29 வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது

 

 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 7ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 20ம் தேதியும் வெளியாகும் எனத் தகவல்...

 

12-ம் வகுப்பு தேர்வுகள்:

  • தமிழ் 03.03.2027

  • ஆங்கிலம் 08.03.2027

  • வேதியியல் 12.03.2027

  • உயிரியல் 19.03.2027

  • இயற்பியல் 23.03.2027

  • கணிதம் 29.03.2027

10-ம் வகுப்பு தேர்வு தேதிகள்:

  • தமிழ் 17.03.2027

  • ஆங்கிலம் 25.03.2027

  • கணிதம் 31.03.2027

  • அறிவியல் 05.04.2027

  • சமூக அறிவியல் 09.04.2027

  • விருப்பமொழி  12.04.2027