#BIG BREAKING : பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான தேவா காலமானார்..!!

 
Q

பிரபல இசையமைப்பாளர்  தேவா காலமானார்.

 

இந்து படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. முதல் படத்தின் பாடல்கள் ஹிட்டடித்ததை அடுத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறினார். அடுத்தடுத்த படங்களில் மெலோடி, கானா என வெரைட்டியாக இசையை கொடுத்தார். எனவே ரசிகர்களால் தேனிசை தென்றல் என்று அழைக்கப்படுகிறார். 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் உச்சத்தில் இருந்தபோதும் தேவாவின் கொடியும் உயரவே பறந்தது.

 

தேவாவை பொறுத்தவரை எந்த ஜானரிலும் அசால்ட்டாக சிக்சர் அடித்தவர். ஆசை, அப்பு, முகவரி, குஷி, ஆஹா, காதல் கோட்டை, அருணாச்சலம், பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் என பல படங்களில் அருமையான மெலோடிகளை கொடுத்தவர். அவரது மெலோடி பாடல்கள் காலங்கடந்தும் இன்றும் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக 90ஸ் கிட்ஸுகளின் டாப் இசையமைப்பாளர்களின் லிஸ்ட்டில் முதல் ஐந்து இடங்களுக்குள் தேவா கண்டிப்பாக இருப்பார்.

மெலோடியில் எப்படி தன்னை நிரூபித்தாரோ அதேபோல் கானா பாடலிலும் தன்னை நிரூபித்தவர் தேவா. இன்னும் சொல்லப்போனால் கோலிவுட்டில் கானாவுக்கென்று அடையாளமாக இருப்பவரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை ஒரு கானா பாடல் பாட வேண்டுமென்றால் அதற்கு தேவாவின் ரெஃபரன்ஸ்தான் எடுக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. உச்சத்தில் இருந்த தேவா காலம் செல்ல செல்ல சினிமாவிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக அவர் சிங்கப்பூரில் ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் நாடகத்துக்கு இசையமைத்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக கோலோச்சிய அவர், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது மறைவால் திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.