#BIG BREAKING : கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்..!!
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்; 72 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர் பிரிந்தது.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சுவாசக்கருவிகளின் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கவனித்து வருவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது. இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யும் மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்திருந்தார். சிகிச்சைக்கு வி.எஸ்.பாபுவின் உடல்நிலை ஒத்துழைப்பதாகவும் முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் கடைசியாக செப்டம்பர் 22 ஆம் தேதி அறிக்கை வெளியானது.
தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனளிக்காமல் மதியம் 2:24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை இப்போது அறிவித்திருக்கிறது.
V.S. Babu, Member of the Tamil Nadu Legislative Assembly for the Kolathur constituency, died while undergoing prolonged treatment for a respiratory ailment at MGM Healthcare in Chennai. pic.twitter.com/ewbumzTaef
— ANI (@ANI) November 19, 2026
V.S. Babu, Member of the Tamil Nadu Legislative Assembly for the Kolathur constituency, died while undergoing prolonged treatment for a respiratory ailment at MGM Healthcare in Chennai. pic.twitter.com/ewbumzTaef
— ANI (@ANI) November 19, 2026

