#BIG BREAKING : அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது..!

 
1

.அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று (ஜூன் 13) காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரவுரியா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான அந்த விமானம், ஏஎன்32 ரகத்தைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. விமானத்தில் முதலில் திடீரென தீப்பற்றியதால் வெடித்து சிதறியது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஓடுதளத்தில் தரையிறங்கிய சில நொடிகளில் விமானம் வெடித்து தீப்பற்றியது. விமானம் வெடித்து தீப்பிடித்தவுடன் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது.