#BIG BREAKING : 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி..!

 
1

குஜராத்தின் ஆமதாபாத்தில் நடக்கும் பைனலில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி  பேட்டிங் செய்தது.


"துவக்க வீரர் அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி -20 உலக கோப்பை தொடரில் 18 பந்துகளில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து அவர் 21 பந்துகளில் 52 ரன் எடுத்து ரச்சீன் ரவிந்திரா பந்தில் செயிபர்டிடடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்."மற்றொரு துவக்க வீரரான சஞ்சு சாம்சனும் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 89 ரன் எடுத்து அவுட் ஆனார்."இவரை தொடர்ந்து இஷான் கிஷனும் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர், 54 ரன் எடுத்த போது  நீஷம் பந்துவீச்சில் சாம்பமனிடம்  கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 52 ரன்களும், இஷான்கிஷன் 54 ரன்களும், அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.