#BIG BREAKING : 113 எம்எல்ஏக்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்..? - விஜயிடம் ஆளுநர் கேள்வி..!

 
1

தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரை இன்று மீண்டும் சந்தித்தார்.இன்று 2 முறையாக த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்துள்ளார்.ஆளுநர் அழைப்பின் பேரிலேயே அவர் ஆளுநர் மாளிகை சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பதவி ஏற்புக்கு முன்பு தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல. அரசியலமைப்பு சட்டத்தை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும். த.வெ.க. தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்பட அவகாசம் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதேபோல்,செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், தனிப்பெரும் கட்சியாக த.வெ.க.வை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். எனவே விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதல்ல என தெரிவித்து இருந்தார்.

நடிகர் பிரகாஷ் கவர்னருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுநரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அவையில் தனது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சுமார் 40 நிமிடங்கள் ஆளுநர் உடன் தலைவர் விஜய் ஆலோசனை ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார் தலைவர் விஜய்.

ஆளுநர் கேட்ட கேள்விகள் :

  • 113 எம்எல்ஏக்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்..?
  • வேறு எந்த கட்சி தவெக அரசை ஆதரிக்கும்..? 
  •  113 எம்எல்ஏக்களை வைத்து நிலையான அரசு அமைக்க முடியுமா?
  • ஆட்சி அமைப்பது தொடர்பான சில விளக்கங்களை கேட்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு
  • பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என எப்படி நம்புகிறீர்கள்..?
  • பெரும்பான்மை கிடைத்துவிடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா..?