#BIG BREAKING : குட் நியூஸ்..! நாளை முதல் அனைத்து பள்ளிகளில் தினமும் P.E.T வகுப்புகள் கட்டாயம்..!
பள்ளிகளில் வாரத்தின் 5 நாட்களும் உடற்கல்வி (PET) வகுப்புகளை நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். மாணவர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தைக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு அவர் நேரில் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், 1-12ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணையில் தகவல் வெளியாகியுள்ளது.
1 முதல் 10ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 உடற்கல்வி வகுப்புகள்
11, 12ஆம் வகுப்புகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள்

