#BIG BREAKING: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு..!!
Sep 15, 2026, 10:20 IST1789447816307
தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா 15-ந்தேதி (அதாவது இன்று) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

