#BIG BREAKING : இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு..!
தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இவற்றில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்துள்ளது. அக்.6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களை அடையாளம் காணும் பணிகளை தொடங்கி உள்ளது. விருப்ப மனு விநியோகத்தையும் அதிமுக நடத்தி வருகிறது.
இந்நிலையில் இடைத்தேர்தலில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், முன்னணி பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்.9) ஆலோசனை நடத்தினார்.
மேலும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இடைத்தேர்தலில் போட்டியிடுவது என எடுத்துள்ள முடிவை திமுக இன்னும் ஒரு மணி நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு
#JustNow || இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு...?#Chennai | #ByElection | #MKStalin | #UdhayanidhiStalin | #DhuraiMurugan | #PolimerNews pic.twitter.com/UGHYXEKuhi
— Polimer News (@polimernews) September 9, 2026

