#BIG BREAKING : நடிகர் தனுஷ் படத்திற்கு தேசிய விருது..!
Updated: Jul 18, 2026, 18:48 IST1784380725905
இந்திய திரைப்படத் துறையில் சிறந்த படைப்புகள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்த விருது அறிவிப்புகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
- கேப்டன் மில்லர் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது அறிவிப்பு..கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு மற்றொரு விருது அறிவிக்கப்பட்டுள்ளது சமூக மற்றும் தேசிய நலனுக்காக எடுக்கப்படும் திரைப்படம் பிரிவில் அறிவிப்பு
- சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது தனுஷ் இயக்கிய ராயன் படத்திற்கு அறிவிப்பு
- ‘மெய்யழகன்’ படத்திற்கு சிறந்த ஒலிக்கலவைக்கான (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிப்பு
- அமரன் திரைப்படத்திற்கு சிறந்த பிண்ணனி இசைக்கான தேசிய விருது. ‘அமரன்’ படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- மகாராஜா படத்திற்காக அனல் அரசுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருது அறிவிப்பு
- இயக்குநர் துஷார் ஹிராந்தானியின் ஸ்ரீகாந்த் படத்துக்கு சிறந்த இந்தி படத்துக்கான தேசிய விருது அறிவிப்பு
- புஷ்பா 2 படத்திற்காக ஷீத்தலுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிப்பு
- சிறந்த திரைக்கதை வசனத்திற்கான தேசிய விருது பெற்றார் லக்கி பாஸ்கர் இயக்குநர் வெங்கீ அட்லூரி
- மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது தேசிய விருது பிரம்மயுகம் திரைப்படத்திற்காக
- சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பிரம்மயுகம் படத்துக்கு அறிவிப்பு
- வீர சாவர்க்கர் படமான சுதந்திர வீரசாவர்க்கர் திரைப்படத்தின் இயக்குனர் ரந்தீப் ஹூடா விற்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது
- அமரன் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெறுகிறார் ராஜ்குமார் பெரியசாமி
- அமரன் படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசை, கலைவாணனுக்கு சிறந்த படத்தொகுப்பு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிப்பு
- சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது புஷ்பா 2 படத்துக்கு அறிவிப்பு
- ‘மெய்யழகன்' படத்திற்கு சிறந்த Sound Mix (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிப்பு!
- சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - கல்கி 2898 ஏ.டி
- மகாராஜா படத்திற்காக சாச்சனா நமிதாஸுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு
- நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருது.அமரன் படத்திற்கான சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்-க்கு விருது
அதேபோல், அமரன் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது ராஜ்குமார் பெரியசாமிக்கும்,
எடிட்டர் கலைவண்ணனுக்கு சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதும் அறிவிப்பு - Non-Feature படங்கள் பிரிவில் ‘BLUE’ என்ற தமிழ் படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருது
- ஏ.ஆர்.எம் திரைப்படத்தில் வரும் அங்கு வான கோனிலு என்ற பாடலுக்காக வைக்கம் விஜயலஷ்மிக்கு தேசிய விருது அறிவிப்பு
- சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பிரம்மயுகம் படத்துக்கு அறிவிப்பு
- அறிமுக இயக்குநர் சுமந்த் பட் இயக்கத்தில், வெளியான ”மித்யா” படத்திற்கு சிறந்த கன்னட படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு
- சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஆர்ட்டிகல் 370 படத்திற்காக யாமி கௌதம்-க்கு அறிவிப்பு
- சுரேனுக்கு சிறப்பு விருது (ஒலிக்கலவை - மெய்யழகன்)
- இயக்குநர் ஃபாசில் முகமதுவின் 'பெமினிச்சி பாத்திமா என்ற படத்துக்கு சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருது

