#BIG BREAKING : பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்..!

 
1

 லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் சேஷு. 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர்,தொடர்ந்து விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த இவர், சன் டிவியின் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்திருந்தார். 

சின்னத்திரையில் நடித்துக்கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய சேஷூ, வீராப்பு, வேலாயுதம், இந்தியா, பாகிஸ்தான் ஏ1, திரௌபதி, ஆண்டி இந்தியன், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். லொள்ளு சபாவில் நடித்து காமேடியானாக சினிமாவில் அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள நிலையில், அவர் நடிக்கும் படங்களில் சேசு நடித்து வந்தார்.

அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடைய சிகிச்சைக்கு ரூ 10 லட்சத்திற்கு மேல் செலவானது. இதனால் சேஷுவின் உயிரை காப்பாற்ற பொதுமக்களும் ரசிகர்களும் ரூ 10 லட்சம் நன்கொடையாக கொடுத்து உதவும்படி அவருடைய ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருத்தனர்.

இந்நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி காலமானார்.