#BIG BREAKING : பால் கொள்முதல் விலை உயர்வு - முதல்வர் அறிவிப்பு..!!
பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூபாய் 3 உயர்கிறது என அறிவித்தார். இதனால் ஒரு லிட்டருக்கு 44 ரூபாயாக வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 3.15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள் எனவும் அறிவித்தார்.
கடந்த 19ஆம் தேதி 110 விதியின் கீழ், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 3 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்திருக்கிறார்.
கறவை மாடுகளுக்கான இதர இடுபொருட்களின் விலை உயர்வால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் அக்கோரிக்கையினை பரிசீலனை செய்து, லிட்டர் ஒன்றுக்கு பால் கொள்முதல் விலை ரூபாய் 44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

