#BIG BREAKING : வழக்குகள் அனைத்தும் ரத்து -முதலமைச்சர் விஜய்..!!

 
1


கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் (2021-2026) போராடிய விவசாயப் பெருமக்கள் மற்றும் ஆசிரியர் சமூகத்தினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்.

110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.


அதில்,

ரூ. 4,800 கோடி ஒதுக்கீட்டில், வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைக்கப்படும்.
ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் குடிநீர் வழங்க ரூ. 500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ. 1000 கோடியும், பழமையான 33 கூட்டுக் குடிநீர் திட்டங்களை சீரமைக்க முதற்கட்டமாக ரூ. 300 கோடியும் ஒதுக்கப்படும்.
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திரகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ. 410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேற்கண்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அமைதியான முறையில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், பரந்தூர் விமானநிலையத்தை எதிர்த்து போராடியவர்கள், திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் மனிதாபிமான அடிப்படையில் வாபஸ் பெறப்படுகிறது என்று கூறினார்.

 

Image

Image