#BIG BREAKING : விஜய்க்கு சிபிஐ சம்மன்! நாளை மீண்டும் விசாரணை!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியை தொடங்கிய விஜய், இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுலா செல்ல விஜய் திட்டம் வகுத்தார். அந்த வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தி முடித்தார். அடுத்தாக கரூர் மாவட்டத்திற்கு காலதாமதமாக சென்ற நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் துடி துடித்து உயரிழந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக முதலில் தமிழக சிறப்பு குழு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது. அந்த வகையில் சிபிஐ போலீசார் கரூரில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அடுத்தக்கட்டமாக தவெக நிர்வாகிகளையும் டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல தவெக தலைவர் விஜய்யையும் நேரில் ஆஜராக கடந்த ஜனவரி மாதம் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய் இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இவ்வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

