#BIG BREAKING : 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் விபத்து.. இளைஞர் பலி..!!

 
Q

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஷூட்டிங், சமீபத்தில் சென்னை பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடந்து வந்துள்ளது. இதில் ஏறபட்ட விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்த கார்த்திகேயன் என்கிற 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

 

வீட்டைப் போன்ற கலை அலங்காரப் (Set work) பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் 28 வயதான கார்த்திகேயன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

 

மின் விசிறி பொருத்திக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பலியாகி இருக்கிறார். இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இது குறித்து, விபத்து ஏற்பட்டவுடன் கார்த்திகேயனை மீட்டு, அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரிந்து, இடத்திற்கு வந்த கானத்தூர் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.