#BIG BREAKING : தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்! -அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு..!

 
1

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தலைமை தேர்தல் கமிஷன் 2025ல் துவக்கியது. இதற்காக, நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்தது. இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில், 97.30 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது, 5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் உள்ளனர்.இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும், கடந்த 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்க்க 22.8 லட்சம் மனுக்கள்; பெயர் நீக்க 2 லட்சம்; திருத்தம் செய்ய 9.90 லட்சம் மனுக்கள் என, மொத்தம் 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. 

இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளார். இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும். 
ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925, 
பெண் வாக்காளர்கள் - 2,89,60,838, 
மூன்றாம் பாலினம் - 7,617. 

SIR-க்கு முன்பு 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 74,07,207 வாக்காளர்கள் (இறந்தவர்கள், இடமாற்றம் ) நீக்கப்பட்டுள்ளனர்.