#BIG BREAKING: சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் : வன்கொடுமைக்கு ஆளான 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு..!!

 
Q

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேடினர். அப்போது முட்புதரில் பச்சிளம் குழந்தை காயங்களுடன் உடல்நலம் குன்றி இருப்பது கண்டறியப்பட்டது.

பிறகு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனிடையே குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பாக பீஹாரைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.