"மனம் பதைக்கிறது; பவதாரிணியின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியாதது" - கமல் ஹாசன் இரங்கல்!!

 
kamal

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

tn

இளையராஜாவின் மகளும் , பாடகியுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்தார்.  அவருக்கு வயது 47. சுமார் ஆறு மாதங்களாக இலங்கையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பவதாரணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணியளவில் காலமானார்.  பின்னணிப் பாடகியான பவதாரணி 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்று என்ற பாடலுக்காக தேசிய விருதினையும் பெற்றுள்ளார். பவதாரிணி இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.