பாரதியார் நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை!!

 
rg

பாரதியார் நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

rb

சுப்பிரமணிய பாரதி விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.[சான்று தேவை] பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

rb

இந்நிலையில்  மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி, அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு  அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் & அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, துணை மேயர் திரு.மு. மகேஷ் குமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.