“பயமாக இருக்கிறது..”- இறப்பு குறித்து பாரதிராஜா சொன்ன வார்த்தைகள்

 
சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்! முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்

இந்த உலகை எவ்வளவு அழகாக ரசிக்க முடியுமோ அந்த அளவுக்கு நான் ரசித்துவிட்டேன் என இயக்குநர் பாரதிராஜா கூறியது நினைக்கூரதக்கது.

கடந்த சில நாட்களாகக் கடுமையான உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார்.  இந்தத் திடீர் மறைவுச் செய்தி திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு நேர்க்காணல் ஒன்றில் பாரதிராஜா இறப்பு குறித்தும் பேசியுள்ளார். அதில், “இந்த உலகில் பூக்கள் அழகு, பெண்கள் அழகு, மேகம் அழகு, மலை அழகு, நீர்வீழ்ச்சி அழகு அனைத்தும் அழகு. இதையெல்லாம் விட்டுவிட்டு போய்விடுவோமோ என்று பயமாக இருக்கிறது. உடம்பு போய்விடும். நான் நெனச்சது. இதை நினைக்கும்போது பயமா இருக்கிறது. இந்த உலகை நான் காதலிக்கிறேன், என்னை நான் காதலிக்கிறேன், இது போய்விடக் கூடாது என்று நினைக்கிறேன். பலரும் சொல்கிறார்கள். ஏழேழு ஜென்மம் இருக்கிறது என்கிறார்கள், புல்லாகப் பிறப்போம், பூண்டாகப் பிறப்போம். அதையெல்லாம் நம்பவில்லை. இந்த உலகை எவ்வளவு அழகாக ரசிக்க முடியுமோ அந்த அளவுக்கு நான் ரசித்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.