உதயநிதி ஸ்டாலினை சந்தித்த பாரதிதாசன்!

 
s

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் மூலம் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.

Image

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “நம் திராவிட மாடல் ஆட்சியின் போது அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் தம்பி பாரதிதாசன் அவர்கள் இன்று நம்மைச் சந்தித்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த தம்பி பாரதிதாசன், சர்வதேச அளவிலான கல்வி நிலையத்தில் தான் செய்துவரும் ஆராய்ச்சி குறித்து மகிழ்ச்சியோடு விளக்கினார்.

சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ்-ல் நடைபெற்ற ஆய்வு மாநாட்டில் பங்கேற்று தன் ஆய்வுப்பற்றி உரையாற்றி திரும்பி இருக்கிறார். பாரதிதாசனின் அடுத்தடுத்த கல்விப்பணியும் – ஆய்வுப்பணியும் சிறக்க வாழ்த்தினோம். அவர் போன்ற நம் மாணவர்களின் லட்சியப்பயணம் தொடர இந்த அரசு அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளர்.


 -