"என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது! Thanks"- பாக்யராஜ்
என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது என நடிகர் பாக்யராஜ் கூறுவது போன்ற கடிதம் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ““சந்தோஷத்தில மத்தவங்களை அன்புடன் உங்கள் K பாக்யராஜ் பெரிய சந்தோஷம் சந்தோஷப்படுத்திப் பாக்குறது” நான் எழுதுன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையோட பெரிய சந்தோஷமா மாத்துன என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும்,திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன். அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக! அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க விரும்புகிறேன். என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். “இருக்கிறேன்” -பார்த்தீர்களா? இன்னும் .....கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் -பார்வையாய்! வரும் போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரஹ பிரவேசம் செய்துவிடும். எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது.
நன்றி! நன்றி சொல்வது மனித இயல்பு ! நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே. இனி நான்.... நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்! அன்புடன் உங்கள் K.பாக்யராஜ்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

