மக்களே உஷார்! இன்று இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!!

 
Q
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை 8:30 மணிக்கு, முந்தைய 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி பகுதியில் தலா 7 செ.மீ., மழை பெய்துள்ளது.வளிமண்டலத்தில், தெற்கு ஒடிஷா முதல் மன்னார் வளைகுடா வரையிலும், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகம் வழியாக, ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மே 7ம் தேதி வரை, இடி, மின்னலுடன், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.இன்று, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சில இடங்களில், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, நீலகிரி, கோவை, திருப்பூர் மலைப் பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மே மாதத்துக்கான வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டது. அதில், 'நாட்டின் தென் மாநிலங்கள், வடகிழக்கு பகுதிகள், வடமேற்கு இந்திய பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும்.இமயமலை அடிவாரம், தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில், இயல்பைவிட வெப்ப அலை அதிகம் காணப்படும். அதேநேரம், நாட்டில் கோடை மழை, இயல்பை விட சற்று அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் 10 மாவட்டங்களில், நேற்று வெயில் சதம் அடித்தது.தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில், நேற்று வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில் 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சியில் 104.18; சென்னை, மதுரையில் தலா 104; திருப்பத்துார் 103.28; தர்மபுரியில் 102.56; ஈரோடுயில் 102.2; கரூர் பரமத்தியில் 101.84; நாகையில் 101.3; பாளையங்கோட்டையில் 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.