மக்களே உஷார்..! சூரியனில் மெகா வெடிப்பு: ரேடியோ மற்றும் GPS சேவைகள் முடங்கும் அபாயம்..!

 
1 1

சூரியனில் அவ்வப்போது மிகப்பெரிய வெடிப்பு நிகழ்கிறது. இவற்றை சூரிய புயல் என வகைப்படுத்துகின்றனர். கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் சூரியனில் மிக சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது.

இது குறித்து 'நாசா' வெளியிட்ட அறிக்கையில், 'சூரியனின் மேற்பரப்பில் 'ஆக்டிவ் ரீஜியன் 14366' என்ற பகுதியில் மிக சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு ஏற்பட்டது. 'இந்த வெடிப்பு, பூமியின் அயனோஸ்பியர் வளிமண்டலத்தை பாதித்து, ரேடியோ அலைகள் துண்டிப்பு, இருப்பிடம் காட்டும் சேவைகளில் இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது' என கூறியுள்ளனர்.

சூரிய புயல் நிலவரத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை வழங்குவதில், இந்தியாவின் முதல் சூரியக் கண்காணிப்பு விண்கலம், 'ஆதித்யா - எல்1' முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த விண்கலம் பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள பூமி - சூரிய எல்1 லக்ராஞ்ச் புள் ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் அனில் குமார் கூறுகையில், “ரேடியோ அலைகளை பயன்படுத்தும் சேவைகளில் தடங்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 50க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களும் கண்காணிக்கப்படுகின்றன. “ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க அவசரத் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன,” என்றார்.