மக்களே உஷார்..! யாசகம் கேட்பது போல் நடித்து திருட்டில் ஈடுபடும் வடமாநில பெண்கள்..!

 
1

மக்களே உஷாரா இருங்க, வீட்டை நோட்டமிட்டு திருடுவதற்கு கூட்டம் ஒன்று கோவை மாநகரில் கையும் களவுமாக சிக்கியுள்ளது.

தனியாக இருப்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் யாசகம் கேட்பது போல் வந்த பெண்கள், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து செம்பு கம்பிகள் மற்றும் ஏ.சி. செம்பு குழாய்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில், மீண்டும் அதே பகுதிக்கு வந்த வடமாநில பெண்களை, அப்பகுதி மக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பெண்கள் ஆளுக்கொரு திசையில் கூச்சலிட்டபடி ஓடினர்.

நீண்ட நேரம் போராடி அந்த திருட்டு கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் ஆதார் கார்டு இல்லாததால் அந்த கும்பலை போலீசார் விடுவித்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.