மக்களே உஷார்..! ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 6 மாதம் சிறை தண்டனை..!

 
1 1

 தீபாவளிப் பண்​டிகையை ஒட்​டி, ரயி​லில் பட்​டாசுகளை எடுத்​துச்​செல்​வதை தடுக்க தீவிர சோதனை விரை​வில் தொடங்க உள்​ளது. ரயி​லில் பட்​டாசு எடுத்​துச்​செல்​வது கண்​டு​பிடிக்​கப்​பட்​டால், கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று ஆர்​பிஎஃப் போலீ​ஸார் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து, ஆர்​பிஎஃப் அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில்​களில் பட்​டாசு உள்​ளிட்ட தீவிபத்து ஏற்​படுத்​தும் பொருட்​களை கொண்டு செல்​லத் தடை உள்​ளது. சிலர் பண்​டிகைக் காலங்​களில் விதி​முறை​களை மீறி பட்​டாசு போன்ற பொருட்​களை எடுத்து வரு​கின்​றனர். இதனால் பயணி​களின் பாது​காப்பு கேள்விக்​குறி​யாகிறது.

எனவே தடையை மீறி பட்​டாசு கொண்டு செல்​பவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். முதல் முறை​யாகப் பிடிபட்​டால் ரூ.1,000 அபராதம் அல்​லது 6 மாதங்​கள் சிறைத் தண்​டனை வழங்​கப்​படும். தொடர்ந்து விதி​மீறல்​களில் ஈடு​பட்​டால் 3 ஆண்​டு​கள் வரை​யில் சிறைத் தண்​டனை அல்​லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்​கப்​படும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

ரயில்களின் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். எனவே பயணிகள் தங்களின் பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்வே சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.