மக்களே உஷார்..! தமிழகத்தில் 13 இடங்களில் சதமடித்த வெயில்..!!
- கரூர் 100 டிகிரி பாரன்ஹீட்
- அரியலூரில் 104 டிகிரி பாரன்ஹீட்
- வேலூரில் 103 டிகிரி பாரன்ஹீட்
- ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட்
- மதுரை 101 டிகிரி பாரன்ஹீட்
- திருச்சி - 105 டிகிரி பாரன்ஹீட்
- நாமக்கல் -100 டிகிரி பாரன்ஹீட்
- தருமபுரி -100 டிகிரி பாரன்ஹீட்
- பாளையங்கோட்டை- 100 டிகிரி பாரன்ஹீட்
- சென்னை -100 டிகிரி பாரன்ஹீட்
- திருப்பத்தூர் -100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், மக்கள் சுகாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, வெயிலில் அதிக நேரம் இருக்காமல், போதுமான தண்ணீர் குடித்து உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் 2026 வரை வழக்கத்தை விட அதிகமாக வெப்பஅலை தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
வானிலை மையத்தின் கணிப்புப்படி, கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு இந்தியா பகுதிகளுடன் தென்கிழக்கு தீபகற்பப் பகுதிகளிலும் அதிக நாட்கள் வெப்பஅலை நிலவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஒடிஷா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர பகுதிகள் அதிகமாக பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

