உஷார்! ஊட்டி மலைப்பாதையில் அடுத்தடுத்து கொட்டும் மண்சரிவு... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

 
Q

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று (அக்.23) இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைப் பாதையில் பல இடங்களில் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பர்லியார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து மீது மண் விழுந்த நிலையில், பேருந்தில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உதகை செல்லும் மலை பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 6 வட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.