மீண்டும் பீட்டா! - தேர்தல் பிரச்சாரத்தில் பறக்கவிடப்பட்ட புறாவால் வெடித்த புதிய சர்ச்சை..!
Apr 27, 2026, 04:50 IST1777245655000
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் செய்த ஒரு விஷயத்திற்காக அவருக்கு கண்டனம் தெரிவித்து பீட்டா அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக பல வருடங்களுக்கு முன்பு சிக்கலை ஏற்படுத்திய அதே அமைப்புதான் தற்போது, விஜய்க்கு எதிராக களம் இறங்கியுள்ளது.
விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் புறாவை பறக்கவிட்டு இருந்தார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது. தேர்தல் பிரச்சாரத்திற்கு பறக்கவிட்ட புறாவுக்கு வண்ணம் பூசி பயன்படுத்தியதால், பீட்டா அமைப்பு கண்டனம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.

