தமிழ்த்தாய் முகத்தில் கரியை பூசுவதா?- தவெகவுக்கு திமுக கண்டனம்
தமிழர்களின் உயிர்மூச்சான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' மூன்றாம் பட்சமாக நிறுத்தியுள்ளனர் என தவெக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த அவலநிலை இல்லை!
— DMK IT WING (@DMKITwing) May 10, 2026
மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறியபோது கூட அங்கு 'வந்தே மாதரம்' ஒலிக்கவில்லை.
ஆனால், இங்கே 'மாற்றம்' என்று வேடமிட்டு வந்தவர்கள், வந்தே மாதரம், தேசிய கீதத்திற்குப் பிறகு, தமிழர்களின் உயிர்மூச்சான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' மூன்றாம்… pic.twitter.com/y9X9y5HqQv
இதுதொடர்பாக திமுக தனது ஐடி விங்க் எக்ஸ் தளத்தில், “பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த அவலநிலை இல்லை!மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறியபோது கூட அங்கு 'வந்தே மாதரம்' ஒலிக்கவில்லை.ஆனால், இங்கே 'மாற்றம்' என்று வேடமிட்டு வந்தவர்கள், வந்தே மாதரம், தேசிய கீதத்திற்குப் பிறகு, தமிழர்களின் உயிர்மூச்சான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' மூன்றாம் பட்சமாக நிறுத்தித் தமிழ்த்தாயின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்!மரபுகளைச் சிதைத்துத் தமிழை அவமதிப்பதுதான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா?முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நேர்ந்த அவமானம்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

