சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் - பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்.. பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் இருந்த போது சிறை கண்காணிப்பாளர் உட்பட பலருக்கு லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு ஒன்றை கர்நாடக அரசு அமைத்தது. அதன்படி சிறையில் சில சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டிருந்ததாகவும், முறைகேடுகள் நடந்திருப்பதும் , லஞ்சம் அளிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடகா லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த வழக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது.
இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகளை பெற லஞ்சம் கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட் பிறபிபித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருவருக்காகவும் ஜாமின் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு அக்.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.