வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு- ரூ.50,000 அபராதம்

 
ச்

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் இருந்த விவகாரத்தை தொடர்ந்து உணவு விநியோகம் செய்த புராடக்டஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது தெற்கு ரயில்வே.

s

சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு கிடந்ததாக புகார் எழுந்துள்ளது. உணவில் வண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் புகார் கூறியிருந்தார். மேலும் இதுகுறித்து புகார் தெரிவித்து உணவு கொடுக்கும் ஊழியர்களை வரவழைத்து விசாரித்து புகார் செய்ததாகவும், இது சாம்பாரில் போடும் சீரகம் என ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து சக பயணிகள் அதை வண்டுயென உறுதிப்படுத்தியதை தொடர்ந்து மன்னிப்பு கேட்டு சென்றனர்.

pt desk

இந்நிலையில் இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட தெற்கு ரயில்வே, நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் இருந்த விவகாரத்தை தொடர்ந்து உணவு விநியோகம் செய்த புராடக்டஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. 


 

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே கூறியுள்ளது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதில் ரயில்வே உறுதியாக உள்ளது என்றும் உணவு தரத்தை கண்காணிக்க ரயில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.