பிரியாணியில் பீடி இலை... போதையில் ரகளை செய்த இளைஞர்

 
briyani

கோவையில் பிரியாணி இலையை பீடி இலை என நினைத்து பிரியாணி கடை ஊழியர்களிடம் போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் எஸ். எஸ். ஹைதராபாத் பிரியாணி என்ற பிரபல அசைவ உணவகம் இயங்கி வருகின்றது. இந்த உணவகத்தில் பிரியாணியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த நபர் சத்திய நாராயணன். போதையில் இருந்த இவர் ஆர்டர் செய்த பிரியாணியை சாப்பிட்டு இருக்கின்றார். அப்பொழுது பிரியாணி ருசித்துக் கொண்டிருந்த சத்தியநாராயணன், வாயில் ஒரு இலை தட்டுபட்டதனை அவர் உணர்ந்திருக்கின்றார். அந்த இலை பீடி துண்டு என நினைத்து, எஸ். எஸ் பிரியாணி கடைக்கு வந்து சண்டையிட்டு இருக்கின்றார். போதை தலைக்கேறி ரகலையில் ஈடுபட்ட சத்யநாராயணனை விசாரிக்க வந்த போலீசாரையும் வசைபாடி இருக்கின்றார்.

ரோட்டில் நின்று கூச்சலிட்டு போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்திருக்கின்றார். இதையடுத்து எஸ். எஸ். பிரியாணி தரப்பில் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டன. சம்பந்தப்பட்ட போதை நபர் சத்திய நாராயணனை அழைத்து போலீசார் விசாரித்து இருக்கின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் சத்திய நாராயணன் பிரியாணி இலையை உட்கொண்டு விட்டு, பிடி இலை என்று உளறியது தெரிய வந்தன. பிறகு காவல் நிலையத்தில், தான் தவறு செய்து விட்டதாகவும், இனி இதுபோன்று நடந்து கொள்ள மாட்டேன் என்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் தந்திருக்கின்றார்.


பிரியாணி கடை ஊழியர்கள் மட்டுமின்றி, விசாரணைக்கு சென்ற போலீசாரையும் தவறாக வசை பாடி, நடுரோட்டில் சாலை போக்குவரத்துக்கு இடையூறாக தகறாரில் ஈடுபட்டதனால், பொதுமக்களுக்கு இடையூறாகவும் சாலை போக்குவரத்துக்கு இடையூறாகவும் செயல்பட்டதாக சத்தி நாராயணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குடும்பத்தாரிடம் விசாரிக்கும் பொழுது, வாலிபர் சத்திய நாராயணன் மனரீதியாக அழுத்தத்தில் உள்ளதாகவும், அவ்வப்போது இதுபோன்று நடந்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர். வாலிபர் சத்யநாராயணன் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார் . மது போதையில் பிரியாணி இலைக்கும் , பீடி இலைக்கும் வித்தியாசம் தெரியாமல், பிரியானி கடையில் தகராறு செய்த வாலிபால் பரபரப்பு ஏற்பட்டது.