உஷாரா இருங்க..! நிர்மலா சீதாராமன் கணவர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

 
1

2024 லோக்சபா தேர்தல் முடிந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பாலும் 300+ இடங்களை வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் சொல்கின்றன. சில கணிப்புகள் என்டிஏ கூட்டணிக்கு 370 இடங்கள் கூட கிடைக்கும் என்று கணித்து உள்ளன. 3 கணிப்புகளை தவிர மற்ற எல்லா கணிப்புகளும் பாஜக ஆட்சியை உறுதி செய்கின்றன. கணிப்புகள் உண்மையாகும் பட்சத்தில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமர் ஆக பதவி ஏற்பார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார். மனைவி பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர் என்றாலும் கணவர் பாஜக ஆட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது எக்சிட் போல் பற்றியும் அவர் எச்சரித்துள்ளார். அதில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது நடக்கும் தில்லுமுல்லுகளை நியாயப்படுத்தவே பாஜகவுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தி வயர் ஊடகத்தில் அவர் அளித்த பேட்டியில், பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது. மெஜாரிட்டி எண் 272. அதை பாஜக பெற வாய்ப்பே இல்லை. அந்த கட்சிக்கு 200- 220 இடங்கள் கிடைக்கும். ஆனால் அதில் கூட 220 என்பது அதிகபட்ச நம்பர். அவ்வளவு நம்பர் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதேபோல் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. என்டிஏ கூட்டணி 272 கிடைக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் கூடுதலாக 30- 35 இடங்களை பெறலாம். சேர்த்து பார்த்தால் 250- 265 இடங்களை என்டிஏ மொத்தமாக பெறலாம். அதுதான் நிலை. இதுவும் கூட அவர்களுக்கு தாராளமாக இடத்தை கொடுத்தால் மட்டுமே சாத்தியம் என்று நிர்மலா சீதாராமன் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான புதிதாக, பாஜக தோற்றால் அந்த கட்சி எளிதாக தோல்வியை ஏற்றுக்கொண்டு போகாது. ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு வருடத்தில் இந்து ராஷ்டிரம் என்கிற திட்டம் நிறைவேறாமல் போகும். காந்தியைக் கொன்ற பிறகு நேர்ந்த கதிதான் நேரும். எனவே வீழ்ச்சியைத் தடுக்க அவர்கள் எதையும் செய்வார்கள். AD பாஜக வீழ்ந்தால் ரஃபேல், PM Cares உள்ளிட்ட பல மோசடிகள் வெளிவரும். இது, பாஜகவுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் நடக்கும் சண்டை. இச்சண்டை, வாக்களிப்பதுடன் முடிவதுமல்ல; ஜூன் 4ம் தேதி முடிவு வெளியானதும் முடிந்துவிடக் கூடியதுமல்ல, என்று நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘இந்தியாவின் வரைபடம் மாறும்’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார். ஊடகங்களில் அவர் பேசுகையில், 2024ல் பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியா மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்காது. உங்களால் இந்தியாவை அடையாளம் கூட காண முடியாது. அந்த அளவிற்கு நாடு மோசம் ஆகும். மோடியே செங்கோட்டையில் இருந்து வெறுப்புப் பேச்சு கொடுப்பார். மோடியே வெறுப்பு பேச்சுக்களை இனி நேரடியாக பேசுவார். இதுவரை கட்சியினர் மட்டுமே இஸ்லாமியர்களை நேரடியாக விமர்சித்த நிலையில் மோடியே அதை பற்றி பேசுவார். மோடி இனி அமைதியாகவோ, நுட்பமாகவோ பேச மாட்டார். வெளிப்படையாக நிலைப்பாட்டை பேசுவார். வெறுப்புப் பேச்சுகளை அவர்கள் எதோ பொருளாதார புரட்சி போல பேசுவார்கள், என்று எச்சரித்து இருந்தார்.