கரைபுரண்டுவந்த வெள்ளம்... குற்றால அருவிகளில் குளிக்க தடை
Apr 4, 2025, 19:52 IST1743776565574

தென்காசி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று மாலை பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.