கனமழை... குற்றால அருவிகளில் குளிக்க தடை

 
ச் ச்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  நாளை மறுநாள் துவங்க உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்தது.

Tenkasi: Allowed to bathe in Koortalam waterfalls - Tourists rejoice |  தென்காசி: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இக்காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடல் மற்றும் அரபிக்கடலுக்கு சென்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா  தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் அக்டோபர் 16 ம்தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும். இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி நெல்லை தென்காசி உள்ளிட்ட ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ன தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை கடையநல்லூர் பாவூர்சத்திரம் மற்றும்  ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல்  பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில் தற்போது பெய்த மழை குளிர்ச்சியை தந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாயத்திற்கும் இந்த மழை ஏற்றதாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் உற்சாகமடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த  மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது . இதன் காரணமாக மெயின் அருவி ஐந்தருவி மற்றும் புலி அரு விகளில்  குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாவிட்டாலும் தண்ணீர் மண் கலந்து வருவதாலும் மெயின் அருவியில் பாதுகாப்பு வளவை தொட்டபடி   தண்ணீர் விழுவதாலும்பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அருவிக் கரைக்கு யாரும் சென்று விடாத படி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.