மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

 
tn

மணிமுத்தாறு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறு மற்றும் அணைக்கட்டு ஆகும். இயற்கையாகவே மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பதாலும் அணைக்கட்டு அதன் குறுக்கே கட்டப்பட்டிருப்பதாலும் மேற்கண்டவாறு வழங்கப்படுகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் இன்னொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.

tn

அணைக்கட்டு மற்றும் அருவி நல்ல சுற்றுலாத் தலங்களாக அமைகிறது. மேலும் தமிழ்நாடு காவல்துறையின் இரண்டு காவலர் பயிற்சி பள்ளிகள் இங்கு செயல்படுகின்றன. பொதுமக்கள் இங்கு சிறிதளவே வாழ்கின்றனர். மலைப் பகுதியான மாஞ்சோலை மற்றும் கோதையாறுக்கு மணிமுத்தாறே நுழைவு வாயில் என்பதால் மணிமுத்தாறு, மாஞ்சோலை, கோதையாறு பகுதிகளை இணைத்து மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சி அமைக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியை பார்வையிட மட்டும் அனுமதியளித்து, குளிக்க தடை விதித்துள்ளது வனத்துறை.