மணிமுத்தாறு அருவியில் குளிக்க நாளை முதல் அனுமதி

 
மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பு!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் குளிக்க அனுமதி வழனஙகப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பு!

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்து உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ண்டு முழுவதும் இங்கு ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருப்பதினால் சுற்றுலா பயணிகளின் வருகை எப்பொழுதுமே இருக்கும்.


இந்த சூழ்நிலையில் கடந்த வாரங்களில் மழை பெய்து கொண்டிருந்ததால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்து இருப்பதால் நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை சுற்றுலாதலங்களுக்கு செல்ல நாளை (மே 28) முதல் அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.