கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி

 
tnt

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி சுற்றி பரவலாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது . தொடர்ந்து கண மழை பெய்து வந்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் நீர்வரத்து சீரானதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.