கும்பக்கரை அருவியில் 5ஆவது நாளாக குளிக்கத் தடை

 
tn

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

tn

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து வருகிறது. இதனால் அருவியில் நீர்வரத்து எப்போதும் காணப்படும் என்பதால் அப்பகுதி வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைவர்.  இந்த சூழலில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

தேனியில் கனமழை.. கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு!

இந்நிலையில் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 5ஆவது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.  தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.