மதுக்கூடங்களில் இரவு நேர மது விற்பனைக்கு அனுமதிக்க கூடாது - டாஸ்மாக் நிர்வாகம்

 
tasmac

மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் இரவு நேர மது விற்பனைக்கு அனுமதிக்க கூடாது என்று  டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tasmacஇதுதொடர்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மாவட்ட மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் லிட்., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கூடாது. இந்த மதுக்கூடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யபடுவதாக ஒரு சில இடங்களில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இச்செயல் டாஸ்மாக் நிறுவனத்தின் விதியை மீறிய செயலாகும்.

tasmac

மதுக்கூடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு டாஸ்மாக் கடை பணியாளர்கள் மதுபானங்களை கொடுக்க கூடாது. கடையில் இருந்து மதுபானங்களை மதுக்கூடத்திற்கு கொடுத்து விற்றால் சம்பத்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.