டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பார்கள் இயங்கலாம் - தமிழக அரசு
டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பார்கள் இயங்கலாம் என விதிகளைத் திருத்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் உள்ளே அல்லது கடையின் அருகே பார்கள் இருக்கலாம் என்ற விதியை திருத்தி, கடையில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பார்க இருக்கலாம் என்ற புதிய விதி அமல் படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு தமிழ்நாடு அரசிதழி வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளையொட்டி 100மீட்டர் எல்லைக்குள் மதுபான கூடத்தை அமைக்கலாம். குறைந்த பட்சம் 205 சதுர அடியில் மதுபான கூடத்தை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டுமெனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டெண்டரி யார் வேண்டுமானாலும் பங்கேற்க முடியும் எனவும், குறிப்பிட்ட நபர்க மட்டும் டெண்டர் எடுப்பது கட்டுப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

